ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி: பெனால்டி முறையில் பரகுவே அதிரடி வெற்றி!

ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி: பெனால்டி முறையில் பரகுவே அதிரடி வெற்றி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (Round of 32), ஜெர்மனி மற்றும் பரகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 41ஆவது நிமிடத்தில் பரகுவே வீரர் ஜூலியோ என்கிசோ ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதியின் 53ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் காய் ஹாவர்ட்ஸ் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

இதனையடுத்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா 1 கோல் மட்டுமே எடுத்திருந்ததால், ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

இந்த நேரத்தில் ஜெர்மனி அணி ஒரு கோல் அடித்தாலும், அது VAR ஆய்வுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்அவுட் முறையில், பரகுவே அணி 4-3 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin