ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது: பாணந்துறை நோக்கிய ரயில் சேவை ரத்து!
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விபத்து காரணமாக ஏனைய ரயில் சேவைகளில் தாமதம் எதுவும் ஏற்படாது என தெரிவித்த அவர், தடம் புரண்ட குறிப்பிட்ட ரயில் சேவை மாத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதேவேளை, தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

