இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புதிய மைல்கல்! 13 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புதிய மைல்கல்! 13 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கைக்கு இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

 

ஜூலை 01ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் மாத்திரம் 167,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜூலை மாதத்தில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 38,785 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 18,419 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,540 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

 

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வழங்கிய நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இதுவரை 310,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

 

மேலும், இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மாத்திரம் 279,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin