உலகக்கோப்பை வரலாற்றில் 20 வருடங்களுக்குப் பின் ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள்!

உலகக்கோப்பை வரலாற்றில் 20 வருடங்களுக்குப் பின் ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள்!

உலகக்கோப்பை போட்டிகளில் ‘ரெட் கார்டு’ (Red Card) பயன்பாடு குறைந்துவிட்டது என்ற எண்ணத்தை 2026 தொடரின் தொடக்க ஆட்டமே மாற்றியமைத்துள்ளது. வெள்ளி (ஜூன் 12) நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ 2-0 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய வேளையில், மூன்று வீரர்களுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது.

 

தென்னாப்பிரிக்காவின் யாயா சிதோல், தெம்பா ஸ்வானே ஆகியோரும், கூடுதல் நேரத்தில் மெக்சிகோவின் சீசர் மான்டெஸும் வெளியேற்றப்பட்டனர்.

 

ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் வெளியேற்றப்படுவது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

 

ரஷ்யா மற்றும் கத்தாரில் நடந்த முழுத் தொடர்களிலுமே தலா 4 ரெட் கார்டுகளே வழங்கப்பட்ட நிலையில், இம்முறை முதல் போட்டியிலேயே அந்த எண்ணிக்கை நெருங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2006 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 28 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin