மாத்தறையில் பரபரப்பு: வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து!

மாத்தறையில் பரபரப்பு: வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து!

மாத்தறை நகரின் மையப்பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு எதிரே அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (29) பிற்பகல் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடையில் ஏற்பட்ட தீ, குறுகிய நேரத்தில் வேகமாகப் பரவி அருகில் அமைந்திருந்த மற்றொரு விளம்பர நிறுவனக் கட்டிடத்திற்கும் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரண்டு வணிகக் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் கிடைத்தவுடன் மாத்தறை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பாக மாத்தறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin