பிரான்ஸில் கோடைகாலத்தில் அதிகரிக்கும் பரிதாபம்!!

விலங்குகள் கைவிடும் படலம்!

கோடை காலம் முழுவதும் விலங்கு நல அமைப்புகள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்திய போதிலும்,
பிரான்ஸில் செல்லப்பிராணிகள் கைவிடப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலங்குகள் கைவிடப்படுவது 10% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சின் பிரட்டனி பகுதியில் விலங்குகள் பாதுகாப்புச் சங்கமான நடத்தும் காப்பகம் ஒன்றுக்கு தொலைக்காட்சிக் குழுவினர் நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தனர்.

அங்கு கடந்த வாரத்தில் மட்டும் ஒரு டஜன் பூனைக்குட்டிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, நாற்பதுக்கும் மேற்பட்டவை வளர்ப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலைச் சமாளிக்கத் தொண்டர்களும் ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், பொதுச் சாலைகளில் விடப்படும் விலங்குகளை மீட்டுவரும் பணிகளில் அவர்கள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாகக் காப்பக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடை காலத்தின் கடுமையான வெப்ப அலைகள் விலங்குகளின் பராமரிப்பை மேலும் கடினமாக்கியுள்ளன.

விலங்குகளுக்கு வியர்வை வராது என்பதால், சுட்டெரிக்கும் வெயிலில் விடப்பட்டால் அவை கடுமையான உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள காப்பக நிர்வாகம்,

அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கக் சிறப்பு மூடுபனி அமைப்புகளை (misting systems) நிறுவியுள்ளது.
விலங்குகளைப் பாதுகாப்பதுடன், நடத்தைச் சிக்கல்களுடன் வரும் நாய்களுக்குத் தத்தெடுப்புக்கு முந்திய தீவிரப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விடுமுறை காலங்களில் செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்க விரும்பும் உரிமையாளர்கள், பிரத்யேக விடுதி மையங்களில் ஒரு வாரத்திற்குப் பூனைக்கு சராசரியாக 115 யூரோக்களும், நாய்க்கு 150 யூரோக்களும் கட்டணமாகச் செலுத்திப் பராமரிக்கும் வசதிகளும் நடைமுறையில் உள்ளன.

Recommended For You

About the Author: admin