அமெரிக்கா–பிரான்ஸ் உறவில் புதிய பதற்றம்!

மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்காவை பிரான்ஸ் பொதுவெளியில் விமர்சித்ததைத் தொடர்ந்து,
பிரான்ஸ் நியமிக்க விரும்பும் புதிய வாஷிங்டன் தூதரின் நியமனத்தை அமெரிக்கா தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதலால் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இரு நாடுகளும் நீண்டகால கூட்டாளிகளாக இருந்தாலும், சுங்க வரிகள், உக்ரைன், ஈரான் உள்ளிட்ட பல்வேறு
சர்வதேச விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தற்போது தூதரக உறவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

உலக அரசியலில் இது புதிய திருப்பமாக அமையுமா?

இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்.

Recommended For You

About the Author: admin