தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த ரயில்: பயணிகள் அவதி!
பயணிகள் அவதி!
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி காலை 5.45 மணிக்கு புறப்பட்ட துரித விரைவு ரயில், காலை 8.00 மணியளவில் வெயாங்கொடை நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது.
பூரணை தினம் என்பதால் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.
பழுதடைந்த ரயிலின் பயணிகள், பின்னால் வந்த ‘யாழ் தேவி’ ரயிலில் ஏற்றிவிடப்பட்டதால், கடும் மக்கள் நெரிசலும் தாமதமும் ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்காக முற்பகல் 10.30 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிய விசேட மாற்று ரயிலை ரயில் திணைக்களம் இயக்கியது.

