நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!

இலங்கையில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் V-Pramithi தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Clean Sri Lanka மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

 

தொடக்கப் பரிசோதனையின் ஒரு பகுதியாக, தெருவோர உணவுகள், தேங்காய் எண்ணெய், பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டன.

 

சந்தைக்கு வரும் உணவுப் பொருட்கள், பானங்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்கள் நச்சுகள் மற்றும் கனரக உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அற்றவை என்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.

 

நுகர்வோரைப் பாதுகாக்கவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் தரநிலைகளை ஊக்குவிக்கவும், பாதுகாப்பற்ற பொருட்கள் சந்தையை அடைவதைத் தடுக்கவும் போன்றவற்றுக்காக இந்த திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin