மைதானங்களுக்கு இடையே 4,000 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கொண்ட 2026 உலகக்கோப்பை!

மைதானங்களுக்கு இடையே 4,000 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கொண்ட 2026 உலகக்கோப்பை!

2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கும், தற்போது வட அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ள 2026 உலகக்கோப்பை தொடருக்கும் இடையே உள்ள புவியியல் ரீதியான அசுரப் பரப்பளவு மாற்றங்களை சுட்டிக்காட்டும் விபரங்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த கத்தார் உலகக்கோப்பையின் போது, இரு மைதானங்களுக்கு இடைப்பட்ட மிக நீண்ட தூரம் வெறும் 75 கிலோமீற்றராக மாத்திரமே காணப்பட்டது (உதாரணமாக அல் ஜனூப் மைதானத்திலிருந்து அல் பைத் மைதானம் வரை). இதன் காரணமாக உலகெங்கிலுமிருந்து வருகை தந்த கால்பந்து ரசிகர்கள் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் மிக இலகுவாக ஒரு மைதானத்திலிருந்து மற்றுமொரு மைதானத்திற்கு பயணிக்கக்கூடியதாக இருந்தது.

 

இருப்பினும், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கியதாக நடாத்தப்படும் தற்போதைய 2026 உலகக்கோப்பை தொடரானது முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இம்முறை போட்டிகள் நடாத்தப்படும் சில நகரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 4,000 கிலோமீற்றருக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது (உதாரணமாக வான்கூவர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களிலிருந்து டொரொன்டோ, நியூயோர்க், மியாமி வரையான தூரங்கள்).

 

இந்த ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரானது எவ்வளவு பரந்த புவியியல் பரப்பளவைக் கொண்டு, ஒரு பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தத் தூரங்கள் பிரதிபலிக்கின்றன.

Recommended For You

About the Author: admin