எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை: ஜூன் மாதத்துடன் மானியங்கள் முடிவுறுவதாக அறிவிப்பு!

அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபன (CPC) அதிகாரிகள், நாடாளுமன்ற நிதிகள் பற்றிய குழுவிடம் (COPF) தெரிவித்துள்ளனர். எனினும், எரிபொருள் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

உலக சந்தையில் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாவாக உயர்ந்துள்ளது. சில்லறை விலையை 392 ரூபாவில் பேண அரசு 100 ரூபா மானியம் வழங்குவதால் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்குவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த மே மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin