மத்தல விமான நிலைய முதலீட்டு விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஜூலை 9 வரை நீடிப்பு!
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களைப் பயன்படுத்தி முதலீடு செய்வதற்கான விண்ணப்பம் கோரல் காலக்கெடு ஜூலை 9 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் விரிவான திட்டங்களைத் தயாரிக்க மேலதிக அவகாசம் வழங்கும் நோக்கில் அமைச்சரவைக் குழு இந்நீடிப்பை வழங்கியுள்ளது. முன்னதாக ஜூன் 9 ஆக இருந்த இறுதித் திகதி, தற்போது ஜூலை 9 பிற்பகல் 2:00 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் சார்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த முதலீட்டு வாய்ப்பை வழங்கியுள்ளது. சமர்ப்பிக்கப்படும் திட்ட முன்மொழிவுகள் நவம்பர் 5 வரையும், பிணை உத்தரவாதங்கள் டிசம்பர் 5 வரையும் செல்லுபடியாக இருத்தல் வேண்டும்.

