அமெரிக்கா சென்றடைந்தது ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி!
2026 கால்பந்து உலகக் கிண்ணத் தொடர் கடந்த ஜூன் 11ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த முறை மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக் கிண்ணத் தொடரை நடாத்தி வருகின்றன.
இத்தொடரில் போர்த்துக்கல் அணி தனது முதலாவது லீக் போட்டியில் எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி காங்கோ (DR Congo) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
குழு K (Group K) பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துக்கல் அணிக்கு, நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 6ஆவது மற்றும் கடைசி உலகக் கிண்ணத் தொடர் இதுவென்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளது.


