FIFA World Cup 2026: முதல் நாளில் மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் அபார வெற்றி!
2026 ஆம் ஆண்டிற்கான 2026 பிஃபா உலகக்கோப்பை போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று தொடங்கின.
‘குரூப் ஏ’ பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டங்களில் மெக்சிகோ மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் தங்களது முதல் வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன.
முதலாவது போட்டியில், சொந்த நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் களம் புகுந்த மெக்சிகோ அணி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டமுடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி ஈட்டியது.
மற்றொரு ஆட்டத்தில், பலப்பரீட்சை நடத்திய தென் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி தங்களது கணக்கைத் தொடங்கியது

