இலங்கையின் கால்பந்து வளர்சிக்கு பெரும் திருப்புமுனையாக, உலக கால்பந்து கூட்டமைப்பான FIFA நிதியுதவியுடன் புதிய சர்வதேச தர கால்பந்து மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கடோல்கலே பகுதியில் முதலீட்டு சபைக்கு சொந்தமான காணியில் இந்த மைதானம் அமையவுள்ளது.
சர்வதேச போட்டிகளை நடத்தும் தரத்தில், நவீன வசதிகளுடன் இது கட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கை இளம் கால்பந்து வீர்களுக்கு உலக தர பயிற்சி வசதிகள் கிடைக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்பும் உருவாகும் என கால்பந்து வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
FIFA-வின் இந்த ஆதரவு இலங்கை கால்பந்துக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாக பார்கப்படுகிறது. மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்கப்படுகிறது.

