அமைச்சர் லால்காந்த தலைமையில் கறுவா தொழில்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!
இலங்கையின் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் கறுவா மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, கறுவாத் தொழில்துறையின் எதிர்கால வழிகாட்டி வரைபடம் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உலக சந்தையில் காணப்படும் கறுவா உற்பத்தியில் 80 சதவீதத்தை இலங்கை வழங்கி வருகிறது.
தற்போது கறுவா ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ஈட்டப்படும் 260 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை, வரும் காலங்களில் 300 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே திணைக்களத்தின் முதன்மை இலக்காகும்.
மேலும், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு ஏக்கருக்கான கறுவா அறுவடையை 250 கிலோவிலிருந்து 400 கிலோவாக அதிகரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சந்திப்பில், கறுவாத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக, ‘காசியா’ போன்ற போலி கறுவா வகைகளினால் ஏற்படும் போட்டி, குறைந்த விலை சந்தை ஆதிக்கம், ஏற்றுமதியாளர்களின் ஏகபோக உரிமை மற்றும் பலவீனமான வர்த்தக முத்திரை (Brand Name) போன்ற சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

