ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் டிரம்ப்: உடன்படிக்கை எட்டப்பட்டதாக அறிவிப்பு!
ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானிய அதிஉயர் மட்டத் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடன் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, கட்டார், துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், உத்தியோகபூர்வ உடன்படிக்கை கையெழுத்திடப்படும் வரை ஈரான் மீதான கடல்சார் முற்றுகை (Naval Blockade) முழுமையாகத் தொடரும் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

