காலையில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து…!
இன்று (04) காலை காலி – கொழும்பு பிரதான வீதியின் தட்டல்ல (Dadalla) பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பேருந்தின் சாரதிக்கு தூக்கம் வந்ததே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பேருந்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
⚠️ சாரதிகளுக்கு ஒரு நினைவூட்டல்: நீண்ட தூர பயணங்களுக்கு முன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சில நொடிகளின் அலட்சியம் பல உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
🙏 காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

