மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை!
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது) என்ற இளம் பெண், கூ*ரிய ஆ*யுதத்தால் வெட்டி படு*கொ*லை செய்யப்பட்டுள்ளார்.
📌 சம்பவத்தின் பின்னணி:
படு*கொ*லை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், அந்த யுவதி அவரது காதலைத் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், நேற்று திங்கட்கிழமை மாலை அந்த இளைஞர் யுவதி மீது கொடூரமான முறையில் வெட்*டுத் தாக்*குதலை மேற்கொண்டு படுகொ*லை செய்துள்ளார்.
🚔 தப்பியோடிய சந்தேகநபர்:
இக்கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான அயல் வீட்டு இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கை*து செய்வதற்காக காவல்துறையினர் தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

