மத்திய கிழக்கில் வெடிக்கும் பெரும் யுத்தம்: ஏழாவது இரவாக ஈரானில் அமெரிக்கா நடத்திய குண்டுமழை…

மத்திய கிழக்கில் வெடிக்கும் பெரும் யுத்தம்: ஏழாவது இரவாக ஈரானில் அமெரிக்கா நடத்திய குண்டுமழை… “முழுமையான தாக்குதல்” நடத்தத் தயாராகும் டெஹ்ரான்!

ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரானுக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Protocole d’accord) கையெழுத்தாகி சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமைதிக்கு மாறாகப் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக உக்கிரமாகச் சூழ்ந்துள்ளன. தினசரி ஏவுகணைத் தாக்குதல்களும், கடல்சார் மோதல்களும் எல்லையைக் கடந்துள்ள நிலையில், ஈரான் தற்போது அமெரிக்காவிற்கு எதிராக ஒரு “முழுமையான போரைத்” (Offensive totale) தொடங்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளது.

 

நேற்று இரவு முதல் இன்று காலை வரை அரங்கேறியுள்ள அந்த அதிர்ச்சித் தகவல்களின் நேரடித் தொகுப்பு இதோ:

 

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (Centcom), சனிக்கிழமை அதிகாலையில் ஈரானியப் பகுதிகள் மீது ஏழாவது இரவாகத் தொடர் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் இராணுவக் கண்காணிப்பு மையங்கள், தளவாடக் கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் (Dépôts souterrains d’armes) மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளைத் தங்களின் போர்விமானங்கள் துல்லியமாகத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் எவ்விதப் பொதுமக்கள் இலக்குகளும் தாக்கப்படவில்லை என அமெரிக்கா கூறினாலும், ஈரானின் தெற்குப் பகுதியான ஹொர்மோஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் இந்தத் தாக்குதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பஹ்ரைன் (Bahreïn) அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!

 

அமெரிக்காவின் இந்தத் தொடர் குண்டுவீச்சுகளுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் (Bahreïn) அமெரிக்கப் படைகள் பயன்படுத்தி வரும் ‘ஷேக் ஈசா’ (Sheikh Isa) என்ற முக்கிய விமானத் தளத்தின் (Base aérienne) மீது ஈரான் தனது வெடிபொருள் ஏந்திய ட்ரோன் (Drones explosifs) விமானங்களை ஏவி அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தளம் அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் மிக முக்கியமான செயல்பாட்டு மையமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி ஜோர்டான் மற்றும் குவைத் நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகளையும் ஈரான் தாக்கியுள்ளது.

 

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்திய இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்டான் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது . ‘ஜோர்டான் வான்பரப்பிற்குள் ஊடுருவித் தங்களின் இராணுவத் தளத்தைக் குறிவைத்து வந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் (Missiles iraniens) தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Défenses aériennes) இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியதாகவும் இந்த இடைமறிப்பு நடவடிக்கையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை’ என்றும் ஜோர்டான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை (Détroit d’Ormuz) கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படாதவாறு ஈரான் ஏற்கனவே மூடியுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்தத் தடையை மீறி அதை கடக்க முயன்ற நான்கு சர்வதேசக் கப்பல்களை, ஈரானின் ‘புரட்சிகரக் காவல்படையினர்’ (Gardiens de la Révolution) ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடுவழியிலேயே அதிரடியாக நிறுத்திப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் பின்னணியில் ஆதரவு அளித்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

 

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே மாதத்தில் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் ஒரு பெரும் போர்க்களமாக மாறியிருப்பது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் “முழுமையான தாக்குதல்” எச்சரிக்கையும், அமெரிக்காவின் தற்காப்புத் தாக்குதல்களும் தொடருமானால், அது உலகப் பொருளாதாரத்தையும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தையும் முற்றிலுமாக முடக்கிவிடும் எனப் உலக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்!

Recommended For You

About the Author: admin