வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனைக்கு தடை – விதிமீறினால் சிறை அல்லது அபராதம்!

இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.

2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2016 வர்த்தமானி ஆகியவற்றின் கீழ் இத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் 1,750 முதல் 1,900 வரையிலான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாவதால், மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

இதுவரை கலாசாரக் காரணங்களுக்காக விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இனி விதிமீறுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin