பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை!

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டங்கள் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் நிமித்தம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் கீழ், பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுகவர்ண ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்குகளின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுகவர்ண உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனை அடுத்தே, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Recommended For You

About the Author: admin