இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகள் அடங்கிய புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இதன்படி, உற்பத்தியின் பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் (அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில்) பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும்.
அத்துடன், உற்பத்தியிலுள்ள மொத்தக் கொழுப்பு உள்ளடக்கம் (TFM) சதவீத அடிப்படையில், குறைந்தபட்சம் 2 மில்லிமீற்றர் அளவிலான தடித்த எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
குழந்தை சவக்காரம், குளியல் மற்றும் சலவை சவக்காரம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஜூலை 9 முதல் அமலுக்கு வரவுள்ளன.

