பொதுப் போக்குவரத்தை தரமான மற்றும் பாதுகாப்பானதாக உருவாக்கும் முதன்மை நோக்கத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை நோக்காகக் கொண்டு , நச்சுப் போதைப்பொருட்களைக் கண்டறியும் விசேட சோதனைத் திட்டங்கள், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் முதன்மைப் பங்களிப்புடன் அண்மைய நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தயாரிக்கப்பட்ட வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தச் செயல்முறையின் மற்றொரு படியாக, இந்தத் திட்டம் நேற்று (16) காலை மகும்புர பல்முனைப் போக்குவரத்து நிலையத்தில் செயல்படுத்தப்பட்டது.

