சர்செல் பகுதியில் 19 வயது இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயம்!

சர்செல் (Sarcelles) பகுதியில் பயங்கர மோதல் : 19 வயது இளைஞர் கத்திக்குத்துக்கு (Coups de couteau) இலக்காகிப் படுகாயம்!

பாரிஸ் புறநகர்ப் பகுதியான வால்-துவாஸ் (Val-d’Oise) மாவட்ட த்திற்கு உட்பட்ட சர்செல் (Sarcelles) நகரில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு வன்முறை மோதலில், 19 வயது இளைஞர் ஒருவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றிரவு சுமார் 10 மணி (22 h) அளவில், சர்செல் நகரின் ‘ரூ டெ மரே’ (Rue des Marais) வீதியில் ஒரு கொடூரமான மோதல் (Violente rixe) வெடித்தது.

இந்த வன்முறையின் போது, 19 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதலுக்கான காரணம் என்ன, இதன் பின்னணி என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் (Police) தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன், அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் (Sapeurs-pompiers), கோனஸ் (Gonesse) மருத்துவமனையின் அவசரக்கால மருத்துவப் படையினரும் (SMUR) இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்தனர்.

கத்திக்குத்தால் பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான மிக அவசர நிலையில் (Urgence absolue) மீட்கப்பட்டு, பாரிசில் உள்ள புகழ்பெற்ற ஜார்ஜ்-பொம்பிடோ மருத்துவமனைக்கு (Centre hospitalier Georges-Pompidou) மேல் சிகிச்சைக்காக விரைவாகக் கொண்டு செல்லப்பட்டார். See less

Recommended For You

About the Author: admin