இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
1986 இல் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை அடுத்து இவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பொறுப்பேற்று, 2023 நவம்பரில் உத்தியோகப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

