ஓட்டு இல்லனு சொல்லிட்டாங்க; கணவருடன் மைனா வெளியிட்ட ஃபீலிங் வீடியோ!!
ஏப்ரல் 23-ந் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்திய நிலையில், பிரபல சின்னத்திரை தம்பதியான மைனா நந்தினி – யோகி இருவரும் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மைனா நந்தினி தனது வாக்கை செலுத்திய நிலையில், யோகி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறியுள்ளனர்
இது குறித்து இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஜனநாயகத்திற்காக எனது ஓட்டை நான் போட்டுவிட்டேன். ஆனால் யோகிக்கு ஓட்டு இல்லை என்ற சொல்லிவிட்டார்கள் என்று மைனா நந்தினி சொல்ல, அதற்கு யோகி, காலையில் நான்தான் முதலில் ஓட்டு போட வேண்டும் என்று அழைத்தேன். ஆனால், எனக்கு மிகவும் பிரச்சினையாக இருந்தது ஒன்றுதான். எனக்கு ஓட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு மட்டும் இல்ல நிறையபேருக்கு ஓட்டு இல்லாமல் போய்விட்டது.
நந்தினிக்கு ஓட்டு இருக்கிறது எனக்கு இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது. எஸ்.ஐ.ஆர் ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுத்தோம். நந்தினிக்கும் கொடுத்தோம். ஆனால் அவருக்கு ஓட்டு இருக்கிறது எனக்கு இல்லை. எதனால் எனக்கு ஓட்டு இல்லை என்று தெரியவில்லை. சரிய பழைய ஓட்டர் ஐடியை சமர்பித்த இடத்தில் செக் பண்ணலாம் என்று அங்கேயும் போய் கேட்டோம். அங்கும் ஓட்டர் லிஸ்டில் எனது பெயர் இல்லை. எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஓட்டு ஒன்று தான் நமது உரிமை, அதுவே இல்லை என்றால் இதை யாரிடம் போய் கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றும் புரிந்தது. நல்ல அரசாங்கம் என்று புரிந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எல்லோரும் உங்களுக்கு ஓட்டு இங்கு இல்லை என்று தான் சொன்னார்கள் என்று யோசி சொல்கிறார். அடுத்து மைனா, நாங்கள் அந்த பழைய முகவரியில் செக் செய்தோம். ஆனால் அங்கேயும் இல்லை. ஆன்லைனில் செக் செய்தோம். அங்கேயும் இல்லை. புது ஓட்டர் ஐடி வைத்து டிநகரில் செக் செய்தோம் அங்கேயும் இல்லை என்று கூறியுள்ளார்.
புது ஓட்டர் ஐடி.யை வரும்போது பழைய ஓட்டர் ஐ.டியை செக் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் புது ஐடி வந்திருக்காது. இந்த ஐடி வந்து 3 மாதங்கள் ஆகிறது. விதிப்படி அனைத்தையும் (எஸ்.ஐ.ஆர் உட்பட) செய்தோம். ஆனால் ஓட்டு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. முதல்முறை ரொம்ப மகிழ்ச்சியாக மனதிருப்தியாக ஓட்டு போட வேண்டும் என்று நினைத்து சென்றோம். ஒரு ஓட்டு தானே என்று சொன்னாலும் வெளியில் பலர் ஓட்டு இல்லாமல் இருந்தனர். அதை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.அடுத்து எந்த அரசாங்கம் வர போகிறது என்று தெரியவில்லை. அவர்களாவது இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று யோகி கூறியுள்ளார்

