சட்டவிரோத டின் மீன் தொழிற்சாலை முற்றுகை – 1.5 மில்லியன் பொருட்கள் பறிமுதல்!

பன்னல, எலபாதகம பகுதியில் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கிவந்த டின் மீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, சுமார் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

தயாரிப்பு திகதி குறிப்பிடப்படாத இந்த டின் மீன்கள், பல முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத உணவு தயாரிப்புகள் மற்றும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin