பிரயாணக் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10) மற்றும் செவ்வாய்க்கிழமை (11) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க கொழும்பில் இதனை அறிவித்தார்.
தற்போது வழங்கப்படும் 600 ரூபா பிரயாணக் கொடுப்பனவு 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறினார்.
2024 இல் 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால், பொதுமக்களுக்கான கிராம மட்ட நிர்வாகச் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

