சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றி வந்தார்.

தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சேனக்க பல்லேதென்ன, இனிவரும் காலங்களில் சிறைச்சாலைகள் திணைக்களம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகளை வெளியிடும் பொறுப்பை ஏற்பார்

Recommended For You

About the Author: admin