இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பல்வேறு பொதிகளில் அடைக்கப்பட்டு 6 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


