பிரான்சில் இரகசியமாக செயற்பட்ட குற்றவியல் கும்பலுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை !
பிரான்சின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘அதனோர்’ (L’affaire Athanor) வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) பாரிசில் வெளியானது. ஓ-து-சென் (Hauts-de-Seine) மாகாணத்தில் உள்ள ஒரு ‘இரகசிய அமைப்பின் (Loge maçonnique) பின்னணியில் மறைந்து இயங்கி வந்த கூலிப்படை மற்றும் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த 22 பேர் மீது தொடரப்பட்ட இந்த மாபெரும் வழக்கில், 17 பேருக்குக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதிரடித் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரிஸ் சிறப்பு அமர்வு குற்றவியல் நீதிமன்றம் (Cour d’assises spécialement composée de Paris), இந்தக் குற்றவாளிகளுக்கு 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை (Prison avec sursis) முதல் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனைகளை (Réclusion criminelle) விதித்துள்ளது.
குறிப்பாக, இந்தக் குற்றவியல் கும்பலை உருவாக்கியவர்கள் மற்றும் இதன் முக்கியச் செயல்படுத்துநர்களுக்கு (Têtes pensantes de l’officine) மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன:
டானியல் பியூலியூ (Daniel Beaulieu): முன்னாள் உள்நாட்டு உளவுத்துறை அதிகாரியான (Ancien agent des renseignements intérieurs) இவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செபாஸ்டியன் லெருவா (Sébastien Leroy): இக்கும்பலின் முக்கிய அடியாளாகவும், கொலைகளைச் செயல்படுத்துபவராகவும் (Homme de main) இருந்த இவருக்கு 27 ஆண்டுகள் சிறை.
ஃபிரடெரிக் வாலியோ (Frédéric Vaglio): இரகசிய அமைப்பின் சக உறுப்பினரான (Frère de loge) இவர், கொலை ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கும் (Chargé de décrocher les contrats criminels) கொடூரப் பொறுப்பிலிருந்தார். இவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2026-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் திகதி தொடங்கிய இந்த மாபெரும் விசாரணை, பல்வேறு கொடூரக் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. கூலிப்படையை ஏவியவர்களாகச் (Commanditaires de barbouzeries) செயல்பட்ட இந்தக் கும்பல் பின்வரும் முக்கியக் குற்றங்களில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது:
மகிழுந்து பந்தய வீரர் (Pilote automobile) ஒருவரின் கொடூரமான கொலை.
நிறுவனப் பயிற்சியாளர் (Coach en entreprise) ஒருவரைக் கொல்ல நடந்த படுகொலை முயற்சி (Tentative d’assassinat).
2018-2019 காலகட்டத்தில் ‘மஞ்சள் ஆடை’ (Gilets jaunes) சமூகப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற ஒரு தொழிற்சங்கவாதியைக் (Syndicaliste) கொலை செய்ய நடந்த முயற்சி.
பல ஆண்டுகளாகப் பொதுச்சமூகத்தின் பார்வையில் படாமல், ஒரு ரகசிய அமைப்பின் போர்வையில் அரங்கேறிய இந்தக் கொடூரக் குற்றங்களுக்கு நீதிமன்றம் தற்போது நீதியான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது!

