குடியிருப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியதால் கட்டிடத்துக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

குடியிருப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியதால் கட்டிடத்துக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

பிரான்சின் ரென் (Rennes) நகரில், அரசு மானியக் குடியிருப்பிலிருந்து (Logement social) வெளியேற சொன்ன கோபத்தில் , நபர் ஒருவர் அந்தக் குடியிருப்பு நிறுவனத்தின் (Bailleur) தலைமை அலுவலகத்தி ற்கு தீவைத்து விட்டு கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்து ள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட கொள்கலனுடன் (Bidon d’essence) தனது காரில் வந்த அந்த நபர், வீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் முகப்பில் (Façade) அதிவேகமாக மோதியுள்ளார். பின்னர் அந்தக் கட்டடத்தில் ஆறு இடங்களில் அவர் தீவைத்துள்ளார். எனினும், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர் (Secours) உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு, அதே கட்டடத்தின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்துத் ( தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்தச் சம்பவம் குறித்து ரென் நகர அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

விசாரணையில், அந்த நபர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தும் வகையில் எழுதிய கடிதம் ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

 

அவர் குடியிருந்த கட்டடத்தை இடிப்பதற்கான (Projet de destruction) திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நீண்ட சட்டப் போராட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் பிறகு, கடந்த ஜூலை 15-ஆம் திகதியன்று அவர் அந்த வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் .

 

அந்தக் குடியிருப்பில் வசித்த மற்ற அனைத்துக் குடும்பத்தினரும் மாற்று இடங்களுக்குச் செல்ல ஒப்புக்கொண்ட நிலையில், இவர் மட்டும் மாற்று வீட்டைத் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வந்துள்ளார். இந்த வெளியேற்றத்தின் விரக்தியிலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin