யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு முத்து இணைக்கப்பட்டது…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு முத்து இணைக்கப்பட்டது…..

அதன் பழைய மாணவர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட மாணவ முதல்வன் எஸ். சதீஸ்தரன் அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமனம்.

(“இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் இன்று (மார்ச் 13, 2026) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இவர் இதற்கு முன்னர் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர். இலங்கை நீதிச் சேவையின் விசேட தர (Special Grade) அதிகாரி ஆவார்.

அரசியலமைப்பின் 111 (2) ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எஸ். சதீஸ்தரன் அவர்கள் இதற்கு முன்னர் யாழ்ப்பாண நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin