நோட்டோவை சீண்டிய ஈரான்..!

நோட்டோவை சீண்டிய ஈரான்..!

அமெரிக்காவின் அணு ஆயுதத்தளம் மீது பயங்கர தாக்குதல். தப்பியது எப்படி..? உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு..!!

துருக்கியின் அடானா பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்காவின் மிக முக்கியமான ‘இன்சிர்லிக்’ விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தையும், நேட்டோ உறுப்பு நாடுகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3.25 மணியளவில், துருக்கியின் அடானா பகுதியில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து, வானில் நெருப்புப் பிழம்புகள் போன்ற சில பொருட்கள் வேகமாகச் செல்வதை உள்ளூர் மக்கள் கண்டனர்.

ஈரான் ஏவிய 3 முதல் 4 பேலிஸ்டிக் ஏவுகணைகளை அந்தத் தளம் நோக்கி ஏவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்சிர்லிக் தளம் மீது விழுவதற்கு முன்னதாகவே, அங்குள்ள நேட்டோவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தன.

அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்காவின் B61 ரக அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தளம் மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியிருப்பது, இந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அடானாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது. மேலும், துருக்கியில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய செயல்களை ஈரான் தவிர்க்க வேண்டும் என்று துருக்கி அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், நேட்டோ அமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுவதால், உலக நாடுகள் இந்த விவகாரத்தை மிகுந்த உன்னிப்புடன் கவனித்து வருகின்றன.

Recommended For You

About the Author: admin