வீட்ல 13 வயசுக்கு கீழ குழந்தை இருக்கா? WhatsApp பயன்படுத்த உடனே இதை பண்ணுங்க!

வீட்ல 13 வயசுக்கு கீழ குழந்தை இருக்கா? WhatsApp பயன்படுத்த உடனே இதை பண்ணுங்க!

WhatsApp பயன்படுத்துவதில் 13 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மெட்டா (Meta) நிறுவனமானது, பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளை (Parent Managed Accounts) களமிறக்கி இருக்கிறது.

 

இந்த கணக்குகளை உருவாக்குவது முதல் அதை எப்படி பயன்படுத்துவது என்பது வரையில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 

13 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனமானது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஆப்களில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறது. இதில் புதிதாக பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளை கொண்டுவந்துள்ளது. இது வழக்கமான கணக்குகள் போலவே இருக்கும்.

 

ஆனால், சைன்-அப் செய்யும்போது, குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் (Guardians) மேற்பார்வையில் இருக்கும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வயது 18 மேல் இருக்க வேண்டும். இதற்கு தனியாக ஆப் கிடையாது. லேட்டஸ்ட் வெர்ஷன் வாட்ஸ்அப் போதும், சைன்-அப் செய்யும்போது, பெற்றோர் அல்லது குழந்தைக்கான டிவைஸ் என்பதை தேர்வு செய்யலாம்.

 

* பேரண்டல் கன்ட்ரோல்

 

* பிரைவசி புரொடெக்சன்

 

* பேரண்ட் பின் நம்பர்

 

* லிமிடெட் ஃபங்ஷன்

 

பேரண்டல் கன்ட்ரோல்: பெற்றோர்கள் தங்களது குழந்தை யாருடன் சாட் அல்லது கால் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். எந்த வாட்ஸ்அப் குரூப்பில் சேரலாம் என்பதை நிர்வகிக்கலாம். தெரியாத பயனர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை ரிவ்யூ செய்து கொள்ளலாம்.

 

பிரைவசி புரொடெக்சன்: குழந்தைகள் அனுப்பும் மற்றும் பெறும் ஒட்டுமொத்த சாட்களும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்டெட் (end-to-end encrypted) செய்யப்பட்டு இருக்கும். ஆகவே, வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், வேறு யாரும் மேசேஜ்களை அணுக முடியாது. முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

 

பேரண்ட் பின் நம்பர்: பெற்றோர்களிடம் கன்ட்ரோல் கொடுக்கப்படுவதால், அவர்களுக்கு 6 இலக்க பின் நம்பர் கொடுக்கப்படும். இந்த பின் நம்பர் வழியாக மட்டுமே பிரைவசி மற்றும் கம்யூனிகேஷன் செட்டிங்கை அணுக முடியும். ஆகவே, பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

 

லிமிடெட் ஃபங்ஷன்: வழக்கமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் போல அல்லாமல், கால்கள் மற்றும் மேசேஜ்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. கால், போட்டோ ஷேர் செய்வது போன்றவற்றை செய்து கொள்ள முடியாது. ஆகவே, பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.

 

எப்படி டவுன்லோட் செய்வது?

 

1. வழக்கம் போல கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 

2. இன்ஸ்டால் செய்த பிறகு சைன்-அப் செய்யும்போது, குழந்தைகளுக்கான டிவைஸ் (Child’s Device) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

 

3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ப்ரொபைலை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

 

4. இப்போது, இந்த குழந்தைகளுக்கான கணக்கில் கியூஆர் கோட் தோன்றும், அதை பெற்றோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இருந்து ஸ்கேன் செய்யுங்கள்.

 

5. இப்போது, உங்களது வாட்ஸ்அப் கணக்கு மற்றும் வயது வெரிபை செய்யப்படும். பிறகு பின் நம்பரை கொடுக்க சொல்லும். 6 இலக்க பின் நம்பரை கொடுத்துவிடுங்கள்.

 

6. அவ்வளவுதான் சைன்-அப் முடிந்துவிட்டது. இப்போது, பெயர், ப்ரொபைல் போட்டோ ஆகியவற்றை வைத்து கொள்ளலாம்.

 

இந்த பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளுக்கான அக்சஸ் படிப்படியாக கொண்டுவரப்படுகிறது. ஆகவே, பல்வேறு நாடுகளில் கிடைக்க தாமதமாகலாம். இருப்பினும், லேட்டஸ்ட் வெர்ஷன் வாட்ஸ்அப் ஆப்பை டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும் இந்த கட்டுப்பாடுகள் வருகின்றன.

Recommended For You

About the Author: admin