14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியது நாசாவின் செயற்கைக்கோள்!

14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியது நாசாவின் செயற்கைக்கோள்! பூமிக்குள் நுழைந்த பிறகும் சில பாகங்கள் உயிர்வாழும்..

Nasa -ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் விரைவில் பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மார்ச் 11 சுற்று பாதையை விட்டு வெளியேறியது.

வான் ஆலன் ப்ரோப் ஏ என்று அழைக்கப்படும் இந்த விண்கலம், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக கிரகத்தைச் சுற்றி வந்தது. இந்த செயற்கை கோள் பூமியைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு பெல்ட்களை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்பட்ட 2 விண்கலங்கள் ஆகும். இவை வான் ஆலன் ப்ரோப் ஏ (Van Allen Probe A) மற்றும் வான் ஆலன் ப்ரோப் பி (Van Allen Probe B) ஆகிய இரட்டை விண்கலம் 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு ஆண்டுகள் என நிர்ணயிக்க பட்ட இதன் வேலை காலம் 7 ஆண்டுகள் வரை இயங்கின. இரண்டு விண்கலன்களும் எரிபொருள் தீர்ந்து போனதால் 2019 ம் ஆண்டு செயலிழந்தன. செயலிழந்த செயற்கைகோள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. வான் ஆலன் ப்ரோப் ஏ தற்போது பூமியை நோக்கி வந்தடைந்தது. இன்னொரு விண்கலம் ப்ரோப் பி (Van Allen Probe B) 2030 ம் ஆண்டு பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சுமார் 1,323 பவுண்டுகள் எடையுள்ள இந்த செயற்கைகோள் அமெரிக்க விண்வெளிப்படையின் கணிப்பு படி வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் என்று தெரிவித்தனர் . ஆனால் விண்வெளி நிறுவனத்தால் அதன் பாதையை இயக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 600 கிலோவுக்கும் அதிகமான விண்கலங்களில் பெரும்பாலானவை வளிமண்டலத்தை கடந்து செல்லும் போது அதன் கடுமையான வெட்பம் காரணமாக எரிந்து போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் “செயற்கை கோளானது மீண்டும் பூமிக்குள் நுழைந்த பிறகும் சில கூறுகள் உயிர்வாழும்” என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “பூமியில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்து குறைவு, தோராயமாக அதன் ஆபத்து 4,200 இல் 1 எனும் விகிதத்தில் தான் இருக்கும்” என்று நாசா தெரிவித்துள்ளது. “நாசா மற்றும் விண்வெளிப் படை இந்த நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து கணிப்புகளை தெரியப்படுத்தும்” எனவும் தெரிவித்துள்ளது.

 

கதிர்வீச்சு பெல்ட்களிலிருந்து எலக்ட்ரான்களின் இழப்பைப் புரிந்துகொண்டு அளவிடவும். எலக்ட்ரான் முடுக்கத்தை ஏற்படுத்தும் செயல்முறைகளுக்கும் இழப்புகளை ஏற்படுத்தும் செயல்முறைகளுக்கும் இடையிலான சமநிலையை தீர்மானிக்கவும் இந்த இரட்டை விண்கலன்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதே போல் 2023 ஆம் ஆண்டு 2450-கிலோகிராம் எடையுள்ள (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. 1984 ஆம் ஆண்டு சேலஞ்சர் என்ற விண்கலத்தில் ஏவப்பட்டது. அதன் எதிர்பார்க்கப்பட்ட வேலை ஆயுட்காலம் 2 ஆண்டுகள் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிர்ணயம் செய்திருந்தாலும், இந்த செயற்கை கோளானது 2005 ஆண்டு ஓய்வு பெறும் வரை 21 ஆண்டுகள் ஓசோன் மற்றும் பிற வளிமண்டல அளவீடுகளை சரியாக செய்து கொண்டே இருந்தது. அது கொரிய தீபகற்பத்தில் விழும் என கணிக்கப்பட்டது. ஆனால் அலூஷியான் தீவின் அருகாமையில் உள்ள பசிபிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியான பெரிங்கடலின் மேற்பகுதியில் நுழைந்தது.

Recommended For You

About the Author: admin