லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோனை, NATO பணியில் இருந்த இத்தாலிய Eurofighter போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இத்தாலியின் 2 Eurofighter விமானங்களும் துருக்கியின் 2 F-16 விமானங்களும் ட்ரோனை எதிர்கொள்ள scramble செய்யப்பட்டன.
தற்போது லாட்விய ராணுவம் ட்ரோன் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதியில் சிதைவுகளை தேடி வருகிறது.
ட்ரோன் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், Ukraine–Russia போரின் தாக்கம் Baltic நாடுகளின் வான்வெளியிலும் அதிகரித்து வருவதாக NATO தெரிவித்துள்ளது.
NATO எல்லைக்குள் ட்ரோன்கள் நுழையும் சம்பவங்கள் அதிகரிப்பது புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலா?

