சிசிலியின் Mount Etna தொடர்ந்து சாம்பலை வெளியேற்றி வருவதால், Catania விமான நிலையம் சனிக்கிழமை அதிகாலை வரை விமான வருகைகளை நிறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 6–12 இடையே 630 விமானங்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் திட்டமிடப்பட்ட 1,974 விமானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்; சிலர் விமான நிலையத்திலேயே பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிமலை சாம்பல் விமான என்ஜின்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு எரிமலை வெடிப்பு… ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலா காலத்தில் விமானப் போக்குவரத்தையே முடக்கியுள்ளது!

