எம்ஜிஆர் குறித்த தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு

எம்ஜிஆர் குறித்த தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க நாசர் வலியுறுத்தல்!

எம்ஜிஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என நடிகர் சங்க தலைவர் நாசர் வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் குறித்து பெருமையாக பேசினார். அப்போது காந்தாராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் பயந்து நடுங்கிவிடுவார் என்றும் கூறியிருந்தார். அவரின் பேச்சு திரை உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான நாசர் கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராஜேந்திர பிரசாத் காந்தாராவை பற்றி பெருமையாக பேசுவது வரவேற்கத்தக்கது. ஆனால் எம்.ஜி.ஆர் பற்றிய கருத்து கண்டிக்கத்தக்கது. அது தனக்கு மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் வருத்தமடைய செய்துள்ளது” எனவும் கூறியுள்ளார்.

 

அத்துடன் எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல அவர் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் அங்குள்ள இயக்குனர்கள் தமிழில் படம் இயக்குகிறார்கள் தமிழில் உள்ள இயக்குனர்கள் தெலுங்கில் படம் இயக்குகிறார்கள், அதே போல் ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் என இரண்டு மொழிகளிலும் பணியாற்றுகிறார்கள். இப்படி ஒரு சூழலில் அவர் பேசியிருக்கும் கருத்து கண்டிக்கத்தக்கது என கூறியிருக்கிறார். இந்த பதிவை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இல்லாமல், சினிமா துறையை சேர்ந்த ஒரு கலைஞனாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ராஜேந்திர பிரசாத் பேசியதற்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாசர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin