ரெடியாகும் மெகா பிளான்… சென்னையின் மேப்பையே மாற்ற போகும்.. முக்கிய முடிவு
பரந்தூர் ஏர்போர்ட் வருமா… வராதா?” என்ற விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சைலண்டாகத் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.
பரந்தூர் பசுமை வழி விமான நிலையத்தைச் சென்னையுடனும், முக்கியத் தொழிற்பேட்டைகளுடனும் இணைக்க, இரண்டு பிரம்மாண்ட சாலைத் திட்டங்களை ‘டாப் பிரையாரிட்டி’யில் எடுத்துள்ளது தமிழக நெடுஞ்சாலைத் துறை. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
ரூட் 1: பல்லூர் – சோகண்டி ரோடு!
முதல் திட்டம், ஏற்கனவே இருக்கும் பல்லூர் – சோகண்டி சாலையை அகலப்படுத்துவது. சுமார் 23.8 கி.மீ நீளம் கொண்ட இந்த மாவட்ட முக்கியச் சாலையை, 60 மீட்டர் அகலத்திற்கு (Right of Way) மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், விமான நிலையத்தின் எல்லைப் பகுதியை ஒட்டி சுமார் 9.2 கி.மீ தூரத்திற்கு இந்தச் சாலை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
நான்கு வழிச் சாலையாக உருமாறப் போகும் இந்தச் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் அமையவுள்ளன. குறிப்பாக, நில எடுப்பு விவகாரங்களில் சிக்கல் ஏற்படாமல் இருக்க, மாற்றி அமைக்கப்படும் பகுதிகளில் சில நெகிழ்வுத்தன்மைகளையும் (Flexibility) அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
ரூட் 2: ஒரகடம் டூ பரந்தூர் – இண்டஸ்ட்ரியல் கனெக்டிவிட்டி!
தென் சென்னை மக்களுக்கும், ஜி.எஸ்.டி சாலை வழியாக வரும் பயணிகளுக்கும் வரப்பிரசாதமாக அமையப்போவது இந்த இரண்டாவது வழித்தடம். ஒரகடம் – செய்யார் தொழில்வழிச் சாலையிலிருந்து நேரடியாகப் பரந்தூருக்கு ஒரு புதிய ‘கிரீன்ஃபீல்ட்’ சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 30.7 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை, சிங்கபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை அமையவுள்ளது. சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை 58-ஐ இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முக்கியமான சந்திப்புகளில் மேம்பாலங்கள் (Grade-separated ramps) அமைக்கவும் ப்ளூ-பிரிண்ட் ரெடியாகிவிட்டது.
ஃபண்டிங் ரெடி… அடுத்தது என்ன?
இந்த இரண்டு சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் ஆகும் செலவைத் தமிழகத் தொழில் துறை ஏற்கும் என்று தெரிகிறது. இதற்கான பரிந்துரைகள் தற்போது தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
மொத்தம் மூன்று திட்டங்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது இந்த இரண்டு திட்டங்களுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வேயை இணைக்கும் மற்றொரு திட்டம் தற்காலிகமாக ஓரம் கட்டப்பட்டுள்ளது.
விமான நிலையம் வருவதற்கு முன்பே, அதற்கான சாலைப் பணிகளைத் துரிதப்படுத்துவதன் மூலம், எதிர்காலப் போக்குவரத்து நெரிசலை இப்போதே முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது அரசு.
நில எடுப்பு நிலவரம்:
மொத்த நிலத் தேவை: சுமார் 5,746 ஏக்கர்.
கையகப்படுத்தப்பட்ட நிலம்: இதுவரை சுமார் 3,400 ஏக்கருக்கும் அதிகமான நிலம் (சுமார் 60%) அரசின் வசமாகியுள்ளது. இதில் 1,900 ஏக்கர் அரசு நிலம், மீதமுள்ளவை தனியார் நிலங்களாகும்.
இலக்கு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கணிசமான நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டம்
நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள முக்கியமான இழப்பீட்டு விவரங்கள்:
நிதி இழப்பீடு: சந்தை மதிப்பை விட 3.5 முதல் 7 மடங்கு வரை கூடுதல் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ₹35 லட்சம் முதல் ₹2.57 கோடி வரை (நிலத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

