ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து… 4½ ஏக்கர் சொத்துக்காக 16 வயது தங்கை உயிரிழப்பு; அண்ணன் கைது!

கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில், குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணத்தை மஞ்சள் காமாலை காரணமாக ஏற்பட்டது போல் காட்ட முயன்றதாகவும், ஆனால் உடற்கூறு பரிசோதனையில் எலி விஷத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை வழக்காக மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பெரும் கடன்களை அடைப்பதற்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்குமான ஆசையால்தான் இந்தக் கொடூரச் செயலை செய்தேன் என்று விசாரணையில் ஆல்பின் பென்னி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin