மூன்றாவது பாம்பைப் பிடிக்க முயன்றபோது கடித்து மருத்துவமனையில் அனுமதி – இந்தியா
மது போதையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சாலையோரத்தில் இருந்த இரண்டு பாம்புகளைப் பிடித்து விழுங்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் நடந்துள்ளது.
முதல் இரண்டு பாம்புகளும் சிறியதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மூன்றாவது முறையாக பெரிய பாம்பைப் பிடிக்க முயன்றபோது அது அவரைக் கடித்தது.
நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, போதையின் காரணமாக சுயநினைவை இழந்த நிலையில் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்பு கடித்தவுடன் வலியால் அலறியபடி சாலையில் விழுந்த அவரை, அப்பகுதி மக்கள் உடனடியாக அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர்கள் அளித்த அவசர சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் இளைஞர் செய்த இந்த வினோதமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

