துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!
மார்ச் 1ஆம் தேதி அன்று ஈரான் படைகள், துபாய் சர்வதேச விமான நிலையம் மீதே தாக்குதல் நடத்தியது.
இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிருக்கு அஞ்சி இருப்பதாக கூறினர். பிரபல வீராங்கனை பி.வி. சிந்து கூட விமான நிலையத்தில் சிக்கி இருப்பதாக பதிவு வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் பத்திரமாக நாடு திரும்பினார். இதற்கிடையே வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கக்கூடிய ஏராளமானவர்கள் எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் போர் காரணமாக இந்த பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!
இந்த சூழலில் துபாயில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் மிக முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு புறப்பட்டு வந்து விட வேண்டாம் என அதில் தெரிவித்து இருக்கிறது.
நீங்கள் பயணம் செய்யக்கூடிய விமான நிறுவனம் விமானம் புறப்படுவது உறுதி எனக் கூறினால் மட்டுமே விமான நிலையத்திற்கு வருகை தாருங்கள் இல்லை என்றால் வரவேண்டாம் என தெரிவித்துள்ளது.
அதாவது உங்களுடைய விமானம் புறப்படுவது உறுதியானால் மட்டுமே விமான நிலையத்திற்கு வாருங்கள் என கூறி இருக்கிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா , ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கத் தொடங்கி இருக்கின்றன.
எனவே பயணிகள் தங்களுடைய விமானம் புறப்படுகிறதா அல்லது ரத்தாகி இருக்கிறதா என்ற தகவலை அறிந்த பிறகு விமான நிலையத்திற்கு புறப்பட வேண்டும் என துபாய் விமான நிலைய நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பகுதியளவு விமான சேவையை தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான விமான நிறுவனங்கள் மார்ச் 4ஆம் தேதி வரை விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.
போர் பதற்றம் நீடிப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான் நேற்று இரவு 9 மணி அளவில் துபாய் மாலுக்கு வருகை தந்திருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் தாக்குதலுக்கு மத்தியிலும் துபாய் பாதுகாப்பாக இருக்கிறது, மக்கள் வழக்கம் போல தங்கள் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவரது மால் பயணம் அமைந்திருப்பதாக மக்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

