கணவர் போன் எடுக்கல” விஷம் இல்லன்னு 25 சத்து மாத்திரைகளை விழுங்கிய மனைவி.. ஹோலி பண்டிகையில் ரணகளம்..!!
MP – மாநிலம் சத்தர்பூர் பகுதியில் கணவன் போன் எடுக்காத ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தி நகர் காலனியைச் சேர்ந்த ரேகா சௌகான் என்பவர், ஹோலிகா தகனம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது தொடர்பாகத் தனது கணவர் அஸ்வினிக்குத் தொடர்ந்து போன் செய்துள்ளார். ஆனால், கணவர் வேலையில் மும்முரமாக இருந்ததாலும், செல்போன் சைலண்ட் மோடில் இருந்ததாலும் அவரால் அழைப்பை ஏற்க முடியவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த ரேகா, வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து ஏதேனும் இருக்கிறதா என்று தேடியுள்ளார்.
எதுவும் கிடைக்காத விரக்தியில், அங்கிருந்த 25 விட்டமின் மாத்திரைகளை மொத்தமாக விழுங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய கணவர், மனைவியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“விட்டமின் மாத்திரைகள் தானே என்று சாதாரணமாக நினைக்கக் கூடாது, அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது உடலில் கடுமையான நச்சுத்தன்மையை உண்டாக்கி உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பண்டிகை நேரத்தில் நடந்த இந்த அசம்பாவிதத்தால் அந்த குடும்பமே ஹோலி கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளது

