லீவு வேணும்னா என்னோடு உடலுறவு வைக்கணும்” என்னை மச்சான்னு கூப்பிடு. பெண் காவலருக்கு அதிகாரி கொடுத்த பாலியல் டார்ச்சர். கண்ணீர் மல்கப் புகார்..!!
UP – மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பணியாற்றும் பெண் காவலர் மேனகா சௌகான், தனது காவல் நிலைய அதிகாரியான (SO) தினேஷ் சந்திர சௌத்ரி மீது மிகக் கடுமையான புகார்களை முன்வைத்துள்ளார். உடல்நலம் குன்றியிருக்கும் தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரியபோது, அதற்குப் பதிலாக அந்த அதிகாரி பாலியல் ரீதியான நிபந்தனைகளை விதித்ததாக மேனகா குற்றம் சாட்டியுள்ளார்.
விடுப்பு வழங்க வேண்டுமானால் தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என அந்த அதிகாரி வற்புறுத்தியதாகவும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணில் அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் மேனகா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ‘மச்சான்’ என்று அழைக்குமாறு கூறி அந்த அதிகாரி தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தை அளித்ததுடன், பலமுறை பாலியல் அத்துமீறல்களிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
சட்டத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியே, சக பெண் காவலரிடம் இத்தகைய இழிவான முறையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடை அணிந்த ஒரு பெண் காவலருக்கே இந்த நிலை என்றால், சாதாரண எளிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தி, குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

