மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு

மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு

ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார்.

 

கடந்த 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மேற்குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.

 

நேற்று (01) அப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மற்றொரு மீனவர் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த சடலத்தைக் கண்டு அதனைக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

 

திஸ்ஸமஹாராமவிலுள்ள தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், நீரில் மூழ்கியதே உயிரிழப்புக்கான காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

 

இந்நிலையில், காணாமல்போன மற்றொரு மீனவரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin