விமானங்களை இரத்து செய்தது துருக்கி

விமானங்களை இரத்து செய்தது துருக்கி

மத்திய கிழக்கு நாடுகளின் தாக்குதல்களின் காரணமாக ஈரான், ஈராக், ஜோர்தான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை துருக்கி இரத்து செய்துள்ளது.

அதேநேரம், கட்டார், குவைத், பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான அனைத்து திட்டமிடப்பட்ட விமானங்களும் செவ்வாய்க்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இதற்கிடையில், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டா மற்றும் மதீனா விமான நிலையங்களுக்கும் ஓமானுக்கும் விமானங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்துள்ளார்.

 

துருக்கிய எயார்லைன்ஸ் மற்றும் பெகாசஸ் எயார்லைன்ஸ் ஆகிய விமானங்கள் தெஹ்ரானில் தரையிறக்கப்பட்டன.

 

மேலும் இரண்டு விமானங்களினதும் ஊழியர்கள் பாதுகாப்பாக துருக்கிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

மேலும் பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள துருக்கிய விமான நிறுவனங்களின் பிற ஊழியர்கள் ஆபத்தில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin