யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கூட்டுறவு சேவைகள் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சின் மேலதிகச் செயலாளர் உபல் சாந்த டி அல்வீஸ்,
தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் தலைவர் வசந்த கே. பி. சேனநாயக்க,
சாவகச்சேரி பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறம்பட முகாமையிடுவதற்காக நிறுவப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவது, அதனூடாக நாட்டிலுள்ள 18 பொருளாதார மத்திய நிலையங்களின் நிர்வாகத்தை ஒரே நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைத்து செயற்படுத்துவது தொடர்பாக இக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நியாயமான சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்களை நிலையான விலையில் வழங்குதல் ஆகிய இலக்குகளை அடைவதற்கான நடைமுறை வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டன.

Recommended For You

About the Author: admin