அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!
பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில் கொண்டு வரப்படும் புதிய PSTA சட்ட வரைவுக்கு எதிராகவும், நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள PTA சட்டத்தை நீக்கக் கோரியும் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (25) மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முக்கிய கோரிக்கைகளாக அடிப்படை மனித உரிமைகளை மதிக்க வேண்டும் , ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும், மக்களை அடக்கும் கறுப்புச் சட்டங்களை உடனடியாக மீளப் பெற வேண்டும்.
மக்களின் குரல் நசுக்கப்படக் கூடாது, நீதித்துறையின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் ஒருமித்த குரலாக இருந்தது.


